சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இலங்கையருக்கு கிடைத்த முக்கிய பதவி
இலங்கையின்(sri lanka) சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின்(icc) ஊழல் எதிர்ப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது. இது ஒரு சுதந்திரமான பதவி.
பல்வேறு பதவி
14 வருடங்கள் இந்தப் பதவியில் இருந்த ரோனி ஃபிளனகன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணியான தர்மவர்தன, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி விளையாட்டுத்துறை அமைச்சுக்காகவும் பல்வேறு சட்ட விடயங்களில் வாதிட்டுள்ளார்.
உலகின் ஏனைய விளையாட்டு நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுமுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |