மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் நிமாலி - மிஷெல்
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டிகளுக்காக இலங்கையின் நிமாலி வெரேராவும் மற்றும் மிச்செல் பெரெய்ராவும் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போட்டி தீர்ப்பாளர்களில் ஒருவராக மிச்செல் பெரெய்ராவும் மற்றும் மத்திஸ்தர்களில் ஒருவராக நிமாலி பெரேராவும் ஐசிசியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் அக்டோபர் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தீர்ப்பாளராக மிச்செல் பெரெய்ரா செயல்படுவார்.
மத்தியஸ்தர்
இந்தநிலையில், நான்காவது மத்தியஸ்தராக நிமாலி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்போட்டிக்கு கள மத்தியஸ்தர்களாக லோரென் ஆஜென்பாக் மற்றும சூ ரெட்ஃபேர்ன் ஆகியோரும் மற்றும் மூன்றாவது மத்தியஸ்தராக கிம் கொட்டனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமனம்
இங்கிலாந்துக்கும் மற்றும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் குவாஹாட்டியில் அக்டோபர் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டிக்கு தீர்ப்பாளராக இந்தியாவின் ஜீ.எஸ்.லக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.

கள மத்திஸ்தர்களாக எலோய் ஷெரிடான் மற்றும் ஜெக்குலின் வில்லியம்ஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்றாவது மத்தியஸ்தராக விரிந்தா ரதியும் மற்றும் நான்காவது மத்தியஸ்தராக க்ளயார் பொலோசக்கும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 4 மணி நேரம் முன்