லெபனானில் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம்
Matara
Sri Lanka
Lebanon
Foreign Employment Bureau
By Kathirpriya
லெபனானில் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட உடலங்களில் இலங்கை பெண்ணின் சடலம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
அதன்படி, உயிரிழந்த பெண் மாத்தறையைச் சேர்ந்த 65 வயதுடைய பிரேமலதா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக
லெபனானில் குடியிருப்பொன்று இடிந்து விழுந்ததை அடுத்து இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்தவர்களில் இலங்கை பெண் ஒருவரும் அடங்குவதாக பெய்ருட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் கடந்த 17 ஆம் திகதி உறுதிப்படுத்தியது.
லெபனானின் - மன்சூரியில் உள்ள ஐந்து மாடிக் கட்டடமொன்று கடந்த 16 ஆம் திகதி இடிந்து விழுந்தது.

கட்டடத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் வெள்ளம் காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக லெபனானின் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்