இலங்கைபெண் சவுதியில் மர்மமான முறையில் உயிரிழப்பு
சவுதிக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற இலங்கையைச் சென்ற இளம் குடும்பபெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹொரணை – அங்குருவாதொட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.
மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழப்பு
சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் உயிரிழந்ததுடன், அவரின் மரணம் தொடர்பில் கிராம உத்தியோகத்தரின் ஊடாக குடும்பத்தார், வினவியதை அடுத்தே அவர் மரணமடைந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் ஒன்றின் ஊடாக அவர் 2021ஆம் ஆண்டு சவுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் தமது குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்தநிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து, அவரது குடும்பத்தினர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.