போருக்கு மத்தியிலும் இஸ்ரேலுக்கு செல்லும் இலங்கை பெண்கள்
கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு இலங்கையை சேர்ந்த தாதியர் குழுவொன்று செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட தாதியர்களாக தெரிவு செய்யப்பட்ட 29 பெண்கள் அடுத்த சில மணித்தியாலங்களில் பணி நிமித்தம் இஸ்ரேலுக்கு வரவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
பெண்கள் குழுவை வரவேற்க
பெண்கள் குழுவை வரவேற்க தானும் இஸ்ரேலில் உள்ள பெண்கள் குழுவும் விமான நிலையத்திற்கு வரவுள்ளதாக அவர் கூறினார்.
யுத்த சூழ்நிலையில் இப்பெண்கள் இஸ்ரேலுக்கு பணி நிமித்தம் வந்தமை பாராட்டுக்குரிய விடயம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேலில் உள்ள தாதியர்களும் இலங்கைக்கு திரும்புவதற்கு கோரிக்கை விடுக்கவில்லை. அந்த நாட்டில் உள்ள இலங்கை தாதியர்களையும் இஸ்ரேல் அதிகாரிகள் பாராட்டியுள்ளதாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.