இஸ்ரேலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்!
இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி, படபொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கட்டுமானத் துறை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இவர் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலைக்காகச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபிரிக்க வம்சாவளி
இந்தநிலையில், ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, அவர் இலங்கையரைக் கொலை செய்துள்ளதாக நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், சந்தேகநபரை கைது செய்வதற்காக இஸ்ரேல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |