வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள் - குறுகிய கால விபரங்கள் வெளியானது
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Qatar
Saudi Arabia
South Korea
By Vanan
குறுகிய காலத்துக்குள் ஒரு இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய செய்திச்சேவை ஒன்று இது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே பயணம்
கடந்த ஜனவரி முதல் தற்போதுவரை ஒரு இலட்சத்து 767 பேர் தனித்தும் 55 ஆயிரத்து 411 பேர் பணியகத்தின் ஊடாகவும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளனர்.
இதன்படி,
- கட்டாருக்கு 39ஆயிரத்து 216 பேரும்
- சவூதிக்கு 3219பேரும்
- தென்கொாியாவுக்கு 2576 பேரும் சென்றுள்ளனர்.
- 46ஆயிரத்து 992பேர் தொழில் நிபுணத்துவத்துடன் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
- 49ஆயிரத்து 923 பேர் தொழில்களுக்காக சென்றுள்ளனர்.
- 38ஆயிரத்து 871 பேர் வீட்டுப்பணியாட்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இலங்கையின் நெருக்கடி நிலை
இலங்கையில் நெருக்கடி நிலை உச்சம் தொட்டுள்ள நிலையில், மக்களின் எதிர்காலம் இன்னும் நிலையற்றதாகவே உள்ளதாக குறித்த செய்திச்சேவை அறிக்கையிட்டுள்ளது.
இதன் காரணமாகவே இலங்கையர்கள் பலரும் நாள்தோறும் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் மற்றும் பழைய கடவுச்சீட்டுக்களை புதுப்பித்துக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அந்த செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
