அவுஸ்ரேலியா மற்றும் இலண்டனிலும் இலங்கை அரசுக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் (படங்கள்)
London
Sri Lankan protests
Australia
By Sumithiran
அவுஸ்ரேலியா மற்றும் இலண்டனில் வசிக்கும் இலங்கையர்கள், இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் அருகே ஒன்று கூடிய இலங்கையர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதன்போது இலங்கையிலிருந்து மோசடி குற்றச்சாட்டுக்களுடன் கூடிய அரசியல்வாதிகள் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி வருவதை அனுமதிக்கக் கூடாது என தெரிவித்ததுடன் ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிப்பு வேட்டையையும் ஆரம்பித்தனர்.
பிரித்தானியாவின் லண்டனில் ஒன்று கூடிய இலங்கையர்கள், அரச தலைவர் கோட்டாபயராஜபக்ஷவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதன்போது இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பலஸ்தீனியர்களும் இணைந்து ' கோட்டா கோ ஹோம் ' என குரல் எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.










நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்