இலங்கையின் நிதி நெருக்கடி - இந்தியாவில் உயர்மட்ட பேச்சு
இலங்கை நிதி நெருக்கடி
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட், அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துள்ளார்.
Lovely as always to meet @DrSJaishankar. We discussed the Maldives and issues facing Indian Ocean island nations. Of course, Sri Lanka’s financial crisis worries us both. I’m always impressed by the Minister’s depth and breadth of knowledge. pic.twitter.com/9918vClOdf
— Mohamed Nasheed (@MohamedNasheed) August 29, 2022
யோசனையை ஏற்ற ரணில்
இதன்போது, இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியதாக மாலைதீவுகளின் சபாநாயகர் மொஹமட் நஷீட் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக மாலைதீவுகளின் சபாநாயகரும் முன்னாள் அதிபருமான மொஹமட் நஷீட் முன்வைத்த யோசனையை கடந்த மே மாதம் 19 ஆம் திகதி, அவ்வேளையில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

