கனேடியத் தூதுவரை சந்தித்த சிறீதரன் எம்.பி
S. Sritharan
Sri Lanka
Canada
By pavan
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ்ஸை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று (13.02.2024) கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த தூதுவர்
அரசியல் நலன்சார் இந்த சந்திப்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமைக்காக சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த தூதுவர், ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளுக்கு தம்மாலான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி