இலங்கையில் நாளை மின்சாரத்தடை இல்லை!
Srilanka
Powercut
CEB
heavyoil
By Indrajith
இலங்கையின் நாளை (10) மின்சார விநியோகத்தில் தடை இருக்காது என்று மின்சார சபை அறிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மின்நிலையம் மற்றும் கொழும்பு துறை மின்சார நிலையங்களுக்கு சுமார் 2500 மெற்றிக்தொன் உலை எண்ணெய்யை விநியோகிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கிமையை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மின்சாரசபை பெருந்தொகையான நிலுவைக் கொடுப்பனவையும் செலுத்தவேண்டியுள்ள நிலையிலேயே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உலை எண்ணெய்யை விநியோகிக்க இணங்கியுள்ளது.
எனினும் இந்த உலை எண்ணெய் விநியோகம் இடம்பெறாதவிடத்து, நாட்டில் இரண்டரை மணித்தியால மின்சார விநியோகத் தடை மேற்கொள்ளப்படலாம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி