சஜித்தின் எதிர்ப்பு குரலுக்கு மத்தியில் ஒடி ஒழிந்த ரணில் - அநுர
கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இனவாதத்தை தூண்டி ஜனாஸாக்களை அடக்கம் செய்வதா எரிப்பதா என்ற பிரச்சினை உருவெடுக்கையில் ரணிலும் (Ranil Wickremesinghe) அநுரவும் (Anura Kumara Dissanayake) ஒழிந்திருந்தபோது அதற்கெதிராக குரல் கொடுத்தது நாமே என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 54 ஆவது மக்கள் வெற்றி பேரணி கல்முனையில் (Kalmunai) நேற்றைய தினம் (14) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபம்
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “ ரணில் விக்ரமசிங்கவும் மற்றும் அநுரகுமார திசாநாயகவும் நாடு முழுவதும் சென்று கூட்டம் போட்டாலும், ஜனாஸா நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது அவற்றிலிருந்து விலகியிருந்தார்கள்.
அவர்கள் அன்று முஸ்லிம் சமூகத்துக்காக முன்னிற்கவில்லை அன்று கோட்டாபய ராஜபக்ச கடைபிடித்த மோசமான இனவாத கொள்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியுமே அரசியல் இலாபங்களை விடுத்து வீதிக்கிரங்கியது.
நாட்டு மக்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா மற்றும் வங்குரோத்து தன்மை ஆகிய இந்த மூன்று அனர்த்தங்களினாலும் நாட்டு மக்கள் இன்று அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் வறியவர்களாக மாறி இருக்கின்ற நிலையில் இந்த வறுமையை போக்குவதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
இது தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குகின்ற வேலைத்திட்டமல்ல மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக 24 மாதங்களுக்கு ஐந்து வேலைத்திட்டங்களின் ஊடாக மாதாந்த 20 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |