சக்தி வாய்ந்த நாடுகளின் ஏல சந்தையாக மாறியுள்ள சிறிலங்கா! அபாய எச்சரிக்கை செய்யும் சஜித்
இன்று நம் நாடு சக்திவாய்ந்த நாடுகளின் ஏல சந்தையாக மாறியுள்ளதோடு, அரசாங்கம்,தேசிய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களையும் கொள்ளையர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ( Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம் எனவும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவகத்தில் பல்வேறு தரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சர்வதேச ஒப்பந்தங்களை இரகசியமாக செயல்படுத்தும் நிலையை அரசாங்கம் எட்டியுள்ளதால். இன்று நாடு கடுமையான ஆபத்தின் விளிம்பில் உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகிய நானும், பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சியில் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்க தலைவர்களுடன் தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து வாராந்தம் கலந்துரையாடுவதற்கான தொழில் சங்கங்களின் மத்திய நிலையமாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் திகழ வேண்டும்.
எதிர்காலத்தில் அமைக்கப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தேசிய மற்றும் பொருளாதாரத்தின் மர்மம் தொடர்பில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் தொழிற்சங்க ரீதியில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடி அனைத்து தீர்மானங்களை மேற்கொள்வது என்றும் இணக்கத்தின் அடிப்படையிலயே செயற்படுவோம்.
அதற்கு எழுத்து மூலம் உத்தரவாதம் தருவதாகவும் அத்தோடு தேசிய வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எமது பிரதான கொள்கை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை, துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள், நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐக்கிய தொழிற் சங்கம், இலங்கை சுதந்திர தொழிற் சங்க கூட்டமைப்பு, தேசிய தொழிற் சங்கம் மற்றும் சுயேச்சையான தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் கலந்து கொண்டள்ளனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களான மனோ கணேசன் (Mano Ganesan), ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) மற்றும் திகாம்பரம் (Thigamparam) உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madhuma Bandara), நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe), முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman), வடிவேல் சுரேஷ் ( Vadivel Suresh) மற்றும் துஷார இந்துனில் (Tushara Indunil) ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.











