அதிகாலையில் கடத்திச் செல்லப்பட்ட பேருந்து- பொலிஸாரின் உடனடி நடவடிக்கை!
By Kalaimathy
ஹங்வெல்ல, களுஅக்கல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி அதிகாலையிலேயே இந்த பேருந்து கடத்தி செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட பேருந்து நேற்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சி.சி.ரிவி காணொளிகள் மூலம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சப்புகஸ்கந்த பகுதியில் வைத்து குறித்த பேருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தின் முன் பகுதி மற்றும் பின் பகுதியின் நிறம் மாற்றப்பட்டு இலக்கத் தகடும் மாற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்