என்றும் தயார் நிலையில் சீனா - சிறிலங்கா தொடர்பில் மீண்டுமொரு அறிவிப்பு!
சிறிலங்கா பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் வெளிவிவகார அமைச்சு ஊடகப் பேச்சாளர் ஸாவோ லிஜியான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“சிறிலங்கா எதிர்நோக்கி வரும் கடன் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இறப்பர், அரிசி உடன்படிக்கை
சீனாவின் இயலுமைக்கு ஏற்ற வகையில் சிறிலங்காவின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு உதவிகளை வழங்கத் தயார்.
சிறிலங்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர், அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான மரபு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
