கொழும்புத் துறைமுக நகரம் இலங்கைக்குக் கிடைத்த பாரியதொரு கொடை!

batticalo colombo port city chandrakumar
By Kalaimathy May 21, 2021 09:46 AM GMT
Report

கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள், கிராமங்களில் உற்பத்தி செய்யும் உற்பத்திகளுக்கும் சந்தை வாய்ப்புக்களும், ஏற்றுமதிகளுக்குரிய வாய்ப்புக்களும், அதிகளவு உள்ளன. இதன் மூலம் அதிகளவு வருமானங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே கொழும்புத் துறைமுக நகர திட்டம் இலங்கைக்குக் கிடைத்த பாரியதொரு கொடையாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு உள்ளக வீதி புனரமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு வீதிக்கான அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கடந்த தேர்தல் பிரசார காலங்களில் அபிவிருத்தி வேலைகள் நடைபெறும் என நாம் மக்களிடத்தில் எடுத்துக் கூறியிருந்தோம் அதுபோல் தற்போது எமது ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள பெரியகல்லாறு உள்ளக வீதி 70 மில்லியன் ஒதுக்கீட்டில் புணரமைப்புச் செய்வதற்குரிய வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் பட்டிருப்புத் தொகுதியில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் துரிதப்படுத்தப்படும். கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, 19 கோடி ரூபா நிதியில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆனாலும் இதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது எதுவும் கிடையாது. இந்த பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலிருந்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு நாடாளுமன்றம் சென்றவர்கள் அங்கு சென்று மக்களுக்கு என்ன தேவை என்று எதுவும் கதைக்காமல் முஸ்லிம்களின் வியாபாரம் தடைப்படும், என்று பிரசாரம் செய்கின்றார்கள்.

தமிழர்களுக்கு என்ன தேவை, தமிழர்களை எவ்வாறு முன்னேற்றலாம் என்று பேசாமல் வருகின்ற அபிவிருத்திகளை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு இவர்கள் மேற்கொள்ளும் தேவையில்லாத பிரசாரங்களால் அபிவிருத்திகள் தடைப்படுகின்றன. கல்வி ஆறு என பெயர் பெற்ற இந்தக் கல்லாறு கிராமத்திற்கு முதன் முதலாக அபிவிருத்தித்திட்டத்தை ஆரத்பித்து வைப்பதையிட்டு சந்தோசமடைகின்றோம்.

அதுபோல் இம்மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் சென்றவர்கள் எமது மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்று அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும், எமது அபிவிருத்திகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தாமல் எம்மோடு பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது போன்று இம்மாவட்டத்தைச் சேர்ந்த தனவந்தர்கள், ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் முதலீடுகளைச் செய்து அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள், கிராமங்களில் உற்பத்தி செய்யும் உற்பத்திகளுக்கும் சந்தை வாய்ப்புக்களும், ஏற்றுமதிகளுக்குரிய வாய்ப்புக்களும், அதிகளவு சந்தர்ப்பங்கள் உள்ளன. இதன்மூலம் அதிகளவு வருமானங்களைப் பெற்றுக் கொள்ளலாம். கொழும்புத் துறைமுக நகர திட்டம் இலங்கைக்குக் கிடைத்த பாரியதொரு கொடையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025