அஜித் ரோஹண விடுத்துள்ள எச்சரிக்கை!
arrest
corona
mask
ajith rohan
sri Lanka
By Kalaimathy
பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்கள் பிடி ஆணையின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முகக் கவசம் அணியாதோரை கைது செய்வது தொடர்பில் விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 151 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி