எதிர்வரும் இரண்டு வாரங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
warning
corona
death
sri Lanka
upul rogana
By Kalaimathy
நாட்டில் கொரோனாத் தொற்று ஆரம்பித்த காலத்தில், நேற்றைய தினமே நாளொன்றில் அதிகளவான தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆகக்கூடியதாக பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில், நேற்று 3839 புதிய கொானாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, நேற்று முன்தினம் 195 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை தற்போதைய நிலைமைக்கு அமைய எதிர்வரும் காலங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி