சுய முடக்கத்திற்கு செல்லுங்கள் - இலங்கையில் கையை மீறிய கொரோனா நிலவரம்!
நிபுணர்களின் கருத்துக்கு செவிசாய்க்காததால் முடக்கலை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை கோருவது அபத்தமான நடைமுறையாகும். எனவே பொதுமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புக்காக சுய முடக்கத்திற்கு செல்லுமாறு ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கோரியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அரசப்பணியாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், தமது உயிர்களை மதித்து அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று அனுரகுமார திசாநாயக்க கோரியுள்ளார்.
அரசாங்கம் மற்றும் ஆட்சியாளரின் அறியாமை முடிவுகளுக்கு பொதுமக்கள் இரையாகிவிடக்கூடாது. ஆட்சியாளர் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காவிட்டால், தம்முடைய பாதுகாப்பை தாமே உறுதி செய்ய வேண்டும் என்றும் அநுரகுமார திசாநாயக்க கேட்டுள்ளார்.
பொது சுகாதார அதிகாரிகளும் ஏற்கனவே சுயமுடக்கத்துக்கு செல்லுமாறு பொதுமக்களை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ள அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் தீவிரத்தன்மை காரணமாக பல நகரங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,