உலக அளவில் 15ஆவது இடத்திற்கு முன்னோக்கி நகர்ந்த இலங்கை! ஆசியாவில் ஒன்பதாவது இடம்
இலங்கையில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், உலக அளவில் கொரோனா விபரங்களை வெளியிடும் worldometers என்னும் இணையத்தளம் பல்வேறு நாடுகளிலும் இறக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொரோனா மரணங்கள் அதிகம் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் உலக அளவில் இலங்கை 15வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தரப்படுத்தலில் இலங்கை நாளுக்கு நாள் முன்னோக்கி செல்கிறது. அத்துடன் ஆசிய வலயத்தில் இலங்கை 9வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இலங்கையில் 156 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதுவே இலங்கையில் அதிக கூடிய கொரோனா மரணம் பதிவான நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.