உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானம் : நாடாளுமன்றத்தில் அறிவித்தார் சபாநாயகர்
அரசியலமைப்பின் 121 (1) யாப்பின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட "உண்ணாட்டரசிறை (திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானம் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று(5) அறிவித்தார்.
இதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள விடயங்களின் பிரகாரம், சட்டமூலம் அல்லது அதன் ஏற்பாடுகள் எதுவும் அரசியலமைப்பின் 12 ஆவது யாப்பு அல்லது அரசியலமைப்பின் ஏனைய ஏற்பாடுகளுக்கு முரணனானது அல்ல என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதற்கமைய, இந்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையில் சட்டரீதியாக நிறைவேற்ற முடியும் எனவும் அறிவித்தார்.
குழு உறுப்பினர்களின் மாற்றங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் பண்டார , எஸ். பீ. திசாநாயக்க, மற்றும் தம்மிக்க பெரேரா பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா , நாலக பண்டார கோட்டேகொட மற்றும் மஞ்சுலா திசாநாயக அக்குழுவில் பணியாற்றுவதற்காக நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 01 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை சபாநாயகர் அறிவித்தார்.
ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவால் 2023 யூலை 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை விடயம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணையொன்று கொண்டு வரப்படலாம் என சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், நாடாளுமன்றச் சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்தவால் 2023 (25) ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை விடயம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணையொன்று கொண்டு வரப்படலாம் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.