பொருளாதார நெருக்கடி சிறுவர்களின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்த ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்!
education
economy
kehaliya rambukwela
sri Lanka
By Kalaimathy
கொரோனா தொற்றினால் கடந்த சில மாதங்களாக அரசாங்கம் 286 பில்லியன் ரூபாயினை செலவிட்டுள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும் சுற்றுலாத்துறையிலிருந்து 4 முதல் 5 பில்லியன் ரூபாய் வரையும் ஆடைத் துறையிலிருந்து 1.7 பில்லியனும் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தங்களது பரீட்சை மற்றும் எதிர்காலம் குறித்து மாணவர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்த சுமைகள் அனைத்தும், சிறுவர்களின் கல்விக்கு தடையாக இருக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் பின்னடைவுகள் இருந்தாலும் சிறுவர்களின் எதிர்காலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி