மற்றொரு திட்டத்தை வகுக்கும் கோட்டாபய! மீளுமா சிறிலங்கா?
srilanka
politics
parliament
economy
gotabaya
By S P Thas
பொருளாதாரப் பேரவை ஒன்றை உருவாக்க வேண்டுமென சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இவ்வாறு பொருளாதாரப் பேரவை உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கோட்டாபய இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு பேரவையைப் போன்று இந்த பொருளாதாரப் பேரவையும் வாராந்தம் கூடி நாட்டின் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு இந்தப் பேரவைக்கு வழங்கப்படும் அரச தலைவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலையிலிருந்து மீண்டுவர இந்த பொருளாதார பேரவை கைகொடுக்குமா இல்லையா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி