தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை!
Sri Lanka
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By pavan
தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவை மீறினால்
தனிநபரோ அல்லது நிறுவனமோ தடை உத்தரவை மீறினால், மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
