சுதந்திரமான பாலஸ்தீன பாலஸ்தீன அரசுக்கு ஐ.நாவில் ஆதரவை வெளிப்படுத்திய இலங்கை
ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு தவிர்க்க முடியாத பங்காளி என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்சபையின் 81ஆவது அமர்வில் உரையாற்றிய அவர், மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்ப ஐ.நா. அமைப்பில் அர்த்தமுள்ள மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கு எதிரான உடனடி நடவடிக்கை, காசாவுக்கான தடையற்ற மனிதநேய உதவி மற்றும் நியாயமான சர்வதேச கடன் விதிகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
விஜித ஹேரத்
அத்துடன், 1967ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் இஸ்ரேலுடன் இணைந்து இயங்கும் சுதந்திரமான பாலஸ்தீன அரசை உருவாக்குவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை, உள்நாட்டு பிரச்சினைகளுக்கான தீர்வு, ஊழல் விசாரணைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |