இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

Mullivaikal Remembrance Day Sri Lanka Sri Lanka Final War
By Shalini Balachandran May 21, 2024 02:10 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்ததென சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் (Agnès Callamard)  கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த கேள்வியை அவர் கொழும்பில் நேற்று (20)  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது விஜயம் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற காலப்பகுதியில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றில் சாப்பாடு சரியில்லை : சபாநாயகரிடம் எம்.பிக்கள் முறைப்பாடு

நாடாளுமன்றில் சாப்பாடு சரியில்லை : சபாநாயகரிடம் எம்.பிக்கள் முறைப்பாடு

 ஆயிரக்கணக்கானவர்கள்

இந்த காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டதுடன் இந்த வருடம் இலங்கையில் நாடாளுமன்ற அதிபர் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் இவ்வருடம் இலங்கையின் தலைவிதியையும் மனித உரிமை பாதுகாப்பின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி | Srilanka Final War Amnesty International

நான் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டேன்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவதற்காகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆதரவை வழங்கவும் நான் இந்த விஜயத்தினை மேற்கொண்டேன்.

விசித்திரமான பேச்சாளர்கள் தேவையில்லை : உதயங்க வீரதுங்கவிற்கு பதிலடி

விசித்திரமான பேச்சாளர்கள் தேவையில்லை : உதயங்க வீரதுங்கவிற்கு பதிலடி

முள்ளிவாய்க்கால் நிகழ்வு

நான் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டதோடு காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தேன்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி | Srilanka Final War Amnesty International

அவர்கள் வெளிப்படுத்துகின்ற துணிச்சலும் மீள்எழுச்சி தன்மையும் நீதியை காண்பதற்கான அவர்களது உறுதிப்பாடும் எனது மனதை தொட்டுள்ளது.

உளவியல் சித்திரவதை இலங்கையில் மிகப்பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர் அவர்களிற்கு என்ன நடந்தது அத்தோடு காணாமல்போதல் என்பது மிகமோசமான வன்முறை.

அது முடிவிற்கு வராது மேலும் பாதிக்கப்பட்டவர்களிற்கு பலபல வருடங்களிற்கு இந்த வலி தொடரும் அத்தோடு மரணத்தை விட இது வலிமிகுந்தது.

இங்கிலாந்து மன்னரை ஓரம்கட்டிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மனைவி

இங்கிலாந்து மன்னரை ஓரம்கட்டிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மனைவி

மன்னிக்க முடியாத குற்றம் 

வலியும் வேதனையும் மிக மோசமானதாக காணப்படுவதுடன் இது உளவியல் சித்திரவதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் தசாப்தங்களாக இந்த வலியும் வேதனையும் தொடரும்.

இது இலங்கையின் மீது விழுந்த கறை இந்த கறையை அகற்ற ஒவ்வொரு இலங்கை பிரஜையும் முன்வரவேண்டும் அத்தோடு அந்த குழந்தைகள் எங்கே நான்கைந்து மாத குழந்தைகள் மூன்று நான்கு வயதானவர்கள் நான் அவர்களின் படங்களை பார்த்திருக்கின்றேன்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி | Srilanka Final War Amnesty International

15 வருடங்களாகியும் பதில் இல்லை இது மிக நீண்டகாலம் அத்தோடு  இது மன்னிக்க முடியாத குற்றம் இவர்கள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும்.

இவர்கள் தாங்களாக முன்வந்து சரணடைந்தவர்கள் அத்தோடு சரணடைவதற்கான பகுதிக்கு தாங்களாக சென்று சரணடைந்தார்கள் இந்தநிலையில்  எங்கே அந்த குழந்தைகள்.” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க பல்கலையில் பூனைக்கு வழங்கப்பட்ட கெளரவ கலாநிதி பட்டம்

அமெரிக்க பல்கலையில் பூனைக்கு வழங்கப்பட்ட கெளரவ கலாநிதி பட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025