அகலாத இனவழிப்பின் நினைவுகள்தான் நமது ஆயுதம்…

Tamils Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Theepachelvan Jan 29, 2024 02:39 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

நமது நாட்காட்டியின் பெரும்பாலான நாட்கள் இனவழிப்பின் நினைவுகளைதான் ஞாபகப்படுத்துகின்றன.

மாதங்களும் நாட்களும் அதிகம் இனவழிப்பை கண் முன் துருத்தி விடுகின்றது.

ஒர் இனத்தின் கண்களிலிருந்து இந்த நாட்கள் அவ்வளவு எளிதாக நீங்கிவிடுவதில்லை.

கூட்டம் கூட்டமாக ஒர் இனம் அல்லது ஒரு சமூகம் இல்லாமல் செய்யப்படுதல்தான் இனவழிப்பு என்று பன்னாட்டு சட்டங்கள் கூறுகின்ற நிலையில் அப்படிப் பல நூறு சம்பவங்கள் ஈழத்தில் நிகழ்ந்தேறியுள்ளன.

அதில் ஒன்றுதான் கொக்கட்டிச்சோலைப் படுகொலை. 1987ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட இப்படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றும் இன்றும் ஈழத்தில் நடந்திருக்கிறது.

அகலாத இனவழிப்பின் நினைவுகள்தான் நமது ஆயுதம்… | Srilanka Genocide Tamil North East Memories Weapon

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இலங்கையிலிருந்து பறந்த அவசர கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இலங்கையிலிருந்து பறந்த அவசர கடிதம்

ஈழத்தில் நினைவேந்தல்

அப்பாவித் தமிழ் மக்கள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலையின் நினைவேந்தல் நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டு குறித்த படுகொலை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.

தமிழ் இனத்தின் வரலாற்றில் இருந்து நீங்க மறுக்கும் படுகொலை வடுக்களின் பட்டியலில் நிலைத்துவிட்ட கொக்கட்டிச்சோலை படுகொலை குறித்து பல்வேறு மாணவப் பிரதிநிதிகளும் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

அகலாத இனவழிப்பின் நினைவுகள்தான் நமது ஆயுதம்… | Srilanka Genocide Tamil North East Memories Weapon

''நான் ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கேவில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்” சீமான் அதிரடி

''நான் ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கேவில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்” சீமான் அதிரடி

அதேபோன்று, கிழக்கு பல்கலைக்கழகத்திலும் கொக்கட்டிச்சோலை படுகொலைக்கான நினைவேந்தல் நடந்திருக்கின்றது.

குறித்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்குதமிழ் தூபியில் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு சுடரேற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஒரு இனப்படுகொலை தலைமுறைகள் தாண்டியும் பெரும் தாக்கத்தை செலுத்துவதாய் அமையும்.

இந்தப் படுகொலைகள் ஒவ்வொன்றும் என்றுமே நீதியையும் பதிலையும் வேண்டி வலியுறுத்திப் போர் புரியும் என்பதற்கு சான்றாகவே இந்த நினைவேந்தல்கள் வடக்கிலும் கிழக்கிலும் நடந்திருக்கின்றது.

குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலை

கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம்.

ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும்.

கொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால் பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது.

அகலாத இனவழிப்பின் நினைவுகள்தான் நமது ஆயுதம்… | Srilanka Genocide Tamil North East Memories Weapon

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை!

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.

1987ஆம் ஆண்டில் தை 28,29 மற்றும் 30ஆம் திகதி முதலிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை அதுவாகும்.

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்கே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர். கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை இலங்கை அரசின் விசேட படைகள் சுற்றி வளைக்க வான் வழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இறால் பண்ணையில் தொடங்கிய இரத்தவேட்டை

மண்முனைத்துறைக்கும் மகிழடித் தீவுக்கும் இடையில் உள்ள இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்ளை தான் முதலில் படுகொலை செய்தனர் அதிரடிப்படையினர்.

அன்று இறால் பண்ணையே இரத்தப் பண்ணையாக மாறியது என்று எழுதுகிறார் மணலாறு விஜயன்.

அந்த மக்களை கைது செய்து தமது துப்பாக்கிளால் சுட்டு வெறிதீர்த்த பின் ரயரிட்டு எரித்து தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர் அதிரடிப்படையினர்.

அகலாத இனவழிப்பின் நினைவுகள்தான் நமது ஆயுதம்… | Srilanka Genocide Tamil North East Memories Weapon

விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்: நண்பர்கள் கூறும் காரணம்

விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்: நண்பர்கள் கூறும் காரணம்

இறால் பண்ணையில் தொடங்கிய இரத்த வேட்டை தலைக்குடா, மகிழடித்தீவு, முனைக்காடு, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, அம்பிளாந்துறை என்று தொடர்ந்தது.

பிரதேசத்தின் கிராமங்களை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் எதரில் வந்தவர்கள் எல்லோரையும் வெட்டி வீசினர்.

கிராமம் அல்லோலகல்லோலமானது. படகுகளில் தப்பிச் சென்ற அப்பாவி மக்களை வான்வழியாக துரத்தித் துரத்தி சுட்டுக்கொன்றழித்தனர்.

மரணங்கள் மலிந்த மண்ணாகிற்று

வீட்டுக்கு வீடு மரணம். கொன்றழிக்கப்பட்டவர்கள் எல்லாம் உறவினர்.

ஒரு வீட்டில் பலர் கொலை. குடும்பம் குடும்பாக கொன்றொழிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலைப்படுகொலை எளிதில் மறக்கவோ எளிதில் ஆறவோ முடியாத பெரும் காயமாக நிகழ்ந்தது.

ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்தனர் இலங்கை அதிரடிப்படையினர்.

அகலாத இனவழிப்பின் நினைவுகள்தான் நமது ஆயுதம்… | Srilanka Genocide Tamil North East Memories Weapon

நாடு வங்குரோத்து நிலையில் என்பது முற்றிலும் பொய்! மத்திய வங்கி ஆளுநர் பகிரங்க தகவல்

நாடு வங்குரோத்து நிலையில் என்பது முற்றிலும் பொய்! மத்திய வங்கி ஆளுநர் பகிரங்க தகவல்

பலரை சிறைப்பிடித்த அதிரடிப்படையினர் அவர்களை மிகவும் மோசமாக சித்திரவதை செய்து துடிதுடிக்க கொன்று போட்ட கொடூரச் செயல்களை உயிர் தப்பிய சிலரது வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் அனைத்தையும் தடயம் தெரியாமல் அதிரடிப்படையினர் அழித்தனர்.

முப்பத்தேழு வருடங்கள் நீதியில்லை

கொக்கட்டிச்சோலைப்படுகொலை நடந்தேறி இன்றைக்கு 37 வருடங்கள் கழிந்துவிட்டன என்று கூறுவதைவிடவும் அந்தக் கொடூரப் படுகொலைக்காய் நீதிக்கு காத்திருந்து 37 வருடங்கள் என்று கூறலாம்.

ஈழத்தில் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த இன அழிப்புப் படுகொலைகள் பலவும் விசாரணை நடக்கிறது என்றும் விசாரணை இல்லை என்றும் இழுத்தபடிப்பதைப் போல இலங்கை அரசுகள் கொக்கட்டிச்சோலைப் படுகொலையையும் கடந்து 37 வருடங்கள்.

அகலாத இனவழிப்பின் நினைவுகள்தான் நமது ஆயுதம்… | Srilanka Genocide Tamil North East Memories Weapon

யாழில் மதுபோதையில் படகை செலுத்திய தந்தை: அச்சத்தில் அலறிய சிறுவர்களை மீட்ட கடற்படையினர்

யாழில் மதுபோதையில் படகை செலுத்திய தந்தை: அச்சத்தில் அலறிய சிறுவர்களை மீட்ட கடற்படையினர்

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் சர்வதேச அளவில் இலங்கை அரசின் இன அழிப்பு முகத்தை அம்பலம் செய்தது. யோசப் பரராச சிங்கம் இந்தப் படுகொலைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பி கவனப்படுத்தினார்.

அவரது கடுமையான முயற்சியினால் இப்படுகொலை குறித்து சர்வதேச அரங்கில் அதிகம் பேசப்பட்டது.

அதனாலேயே ஜே.ஆர். அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.

படுகொலை செய்தவர்களுக்கு பதவியுயர்வு

படையினர் பொறுப்பின்றி நடந்து அப்பாவிகளை பலியாக காரணமாக இருந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபோதும் அந்த அறிக்கையுடன் கொக்கட்டிச்சோலைப் படுகொலை விவகாரத்தை அன்றைய இலங்கை அரசு மறைக்க முனைந்தது.

படைகளைகளுக்கு தண்டனையை ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்ய ஜே.ஆர். அரசு அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கி வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து இனழிப்பு படுகொலைகளை ஊக்குவித்தது.

மட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத் தமிழ் மக்களை துடைத்தெறிந்து அந்த மண்ணை அபகரிப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு அரசியல் நோக்கம் கருதிய இராணுவ நடவடிக்கையே கொக்கட்டிச்சோலைப் படுகொலை.

அகலாத இனவழிப்பின் நினைவுகள்தான் நமது ஆயுதம்… | Srilanka Genocide Tamil North East Memories Weapon

ஈழ நிலைப்பாட்டில் முத்துக்குமாரின் தியாகம்: இன்றுடன் 15 ஆண்டுகள்

ஈழ நிலைப்பாட்டில் முத்துக்குமாரின் தியாகம்: இன்றுடன் 15 ஆண்டுகள்

மிகவும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை எந்திரத்தின் மூலம் நடாத்தப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாத காயமாக நிலைத்துவிட்டது.

இனப்படுகொலை செய்கின்ற படையினருக்கு பதவி உயர்வு வழங்குகின்ற போக்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் அதுவே சர்வதேச ரீதியாக இலங்கை அரசு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போர்க்களத்தை திறந்தும் விடுகிறது.

சில நாடுகள் உயர்பதவிகளில் உள்ள, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு பயணத்தடை விதித்துள்ளது.

எவ்வாறென்றாலும் இலங்கை அரசு அனைத்து இனப்படுகொலைகளுக்கும் பெரும் இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் பொறுப்புக்கூறலை மேற்கொள்வது என்றுமே அவசியமானதாகும்.

சிங்கப்பூர் செல்லவிருக்கும் தமிழரசு கட்சியின் தலைவர்! கொதிநிலையடையும் தமிழ் அரசியல் களம்

சிங்கப்பூர் செல்லவிருக்கும் தமிழரசு கட்சியின் தலைவர்! கொதிநிலையடையும் தமிழ் அரசியல் களம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 29 January, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024