அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் வருத்தத்தில்!

government gotabhaya sir Lanka
By Kalaimathy Aug 18, 2021 07:31 AM GMT
Report

அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக தெரிவித்துக்கொண்டு நிறுவனங்களின் நிதி விபரங்களை மேற்பார்வையிடுவதற்கான சட்ட வரைபினை ராஜபக்ச அரசாங்கம் உருவாக்குவதால், அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஏற்கனவே நிறுவப்பட்ட செயலகத்தின் கீழ் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை உருவாக்குவதோடு மாத்திரமல்லாமல், அந்த அமைப்புகள் ஊடாக இலங்கைக்கு பெறப்படும் அனைத்து நிதி மற்றும் உதவிகளையும் கண்காணிக்க, மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் குறித்த செயலகத்தை இணைப்பதன் மூலம் ஒரு பிரிவை உருவாக்குவது குறித்து அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள தேசிய சமாதானப் பேரவை, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான முக்கியமான திட்டத்தின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என வலியுறுத்தியுள்ளது.

”அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்தாமை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வழிவகுக்கவில்லை. தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி பணப் பரிவர்த்தனைகளை விசாரணை செய்யத் தவறியமை மற்றும் அரசுக்கு வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களை கருத்திற்கொள்ளாமையே காரணம்” என தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலான எந்த விசாரணையும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள தேசிய சமாதானப் பேரவை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குறித்து முடிவற்ற விவாதம் தொடர்கையில், அரச சார்பற்ற நிறுவனங்களின் பழிவாங்கலை நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் அமைதி கட்டமைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக செயற்படும் தேசிய சமாதானப் பேரவை உள்ளிட்ட முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஓகஸ்ட் 8ஆம் திகதி, ஜனாதிபதியையும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு, சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா, ராஜபக்ச அரசாங்கத்தின் நெருங்கிய கூட்டாளியான கலுபஹனே பியரதன தேரர், அருட்தந்தை ஆசிரி பெரேரா, முஸ்லிம் கவுன்சிலின் ஹில்மி அஹமட், செயற்பாடுகளின் போது காணாமல் போன இராணுவ வீரர்களின் உறவினர்களின் அமைப்பை நடத்தும் விசாக தர்மதாச, பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி, மட்டக்களப்பில் அரச சார்பற்ற அமைப்பை நடத்தும் வர்ணகுலசிங்கம் கமலதாஸ், சஞ்சீவ விமலகுணரத்ன, பேராசிரியர் டி. ஜெயசிங்கம், பேராசிரியர் டியூடர் சில்வா, ஜோ வில்லியம்ஸ் மற்றும் தயானி பனகொட ஆகியோர் குறித்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

"பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நீடித்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவர தேவையான நிறுவன சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என ஜூலை 21ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட ட்விட்டர் பதிவை புகழ்ந்துள்ள அவர்கள், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

”தடையின்றி கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளித்து சிவில் சமூகப் பிரதிநிதிகளின் அனைத்துக் கருத்துக்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி, நல்லிணக்க செயல்முறையை முன்னெடுப்பதற்கு சிவில் சமூகத்திற்கு அரசாங்கம் உதவ முடியும் என்று கூறினார்.

சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் தனது அரசாங்கம் உறுதியாக உள்ளது” என ஜனாதிபதி தெரிவித்ததாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பது மற்றும் அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது உள்ளிட்ட பல கருத்துக்களை ஜனாதிபதி தெரிவித்ததாக அரச சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் கண்காணிப்பு செயலகத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு அல்லாமல் வேறு சிவில் விவகார அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இதன்போது கோரப்பட்டுள்ளது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025