தீபச்செல்வனின் நூல்களை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் : வ.ஐ.ச. ஜெயபாலன்
சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை இலங்கை அரசு உடன் விடுவிக்க வேண்டும் என வ.ஐ.ச. ஜெயபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தகங்களை விமர்சிக்கலாம், கண்டனம் தெரிவிக்கலாம், தடைகூட செய்யலாம் ஆனால் தடுத்துவைத்திருப்பது சரியான அணுகுமுறையல்ல எனவும் தோழர் சந்திரசேகர் போன்றவர்கள், இதனை ஆதரிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமிழர்களைப் போலவே கடந்த காலத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய தரப்பு ஜேவிபியினர். அவர்களும் கடந்த காலத்தில் பல தடைகளை எதிர்கொண்டவர்கள். எனவே தமிழ் மக்களும் தமிழ் எழுத்தாளர்களும் எதிர்கொள்ளும் தடைகள், சிக்கல்கள் பற்றி நன்கு அறிவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலையிட வேண்டும்
தீபச்செல்வனின் இந்த நூல்களை தடுத்து வைத்திருப்பது பற்றி ஜனாதிபதி அநுரகுமார திசாயநாயக்க உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தள்ளார்.

இந்தநிலையில் தமிழ் மக்களுக்கு உள்ள கருத்தச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |