மத்திய ஆபிரிக்க குடியரசில் விபத்துக்குள்ளான இலங்கையின் உலங்குவானூர்தி : விசாரணைகளுக்காக நியமிக்கப்பட் குழு
இலங்கையின் விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ 17 ரக உலங்குவானூர்தியொன்று மத்திய ஆபிரிக்க குடியரசில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து
இலங்கை நேரப்படி இன்று காலை 9.30 மணி அளவில் தரையிறங்கச் செல்லும் போது ஏற்பட்ட தூசியுடன் கூடிய காலநிலை காரணமாக குறித்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளாகியதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த உலங்குவானூர்தியில் 5 விமானப்படை வீரர்கள் பயணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த விபத்தில் சிக்கி எவரும் உயிரிழக்கவில்லை என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விசேட குழு
அத்துடன், விமானப்படைத் தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |