வெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு கடத்தப்பட்ட பல இலட்சம் பெறுமதியான பொருள்!
ஜமேக்காவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கொக்கேய்ன் போதைப் பொருளை நேற்று இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுப்படுத்தம் பிரிவினர் இதனை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஜமேக்காவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு 95 கிராம் நிறைகொண்ட கொக்கேய்ன் போதைப் பொருள் சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்டு தபால் சேவை மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுப்படுத்தம் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். ஜமேக்காவிலிருந்து நாரஹேன்பிட்டியவைச் சேர்ந்த ஒருவரின் பெயருக்கு இந்த கொக்கேய்ன் போதைப் பொருள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருளின் பெறுமதி 24 இலட்சம் ரூபா என சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினருடன் இணைந்து சுங்கத் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.