இலங்கையில் இருந்து கடல் வழியே தமிழகம் சென்ற போலந்து நாட்டவர் கைது! (படங்கள்)

Tamil nadu Government Of India
By pavan Jul 25, 2022 07:38 AM GMT
Report

இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் தமிழகத்திற்கு சென்ற போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் அநாதரவான நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த நபரின் படகு தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் படகானது காற்று அடித்து இருவர் பயணம் செய்ய கூடியவாறான படகு என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் சுழியோடிகள் பாவிக்கும் காலணி, படகுக்கு காற்று நிரப்பும் பம் , ஜாக்கெட் , சுழியோடிகள் கடலினுள் பாவிக்கும் கண்ணாடிகள், 18கும் மேற்பட்ட தண்ணீர் போத்தல்கள், மிதக்கும் பைகள் என படகுக்கு அருகில் இருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

தீவிர விசாரணை

இலங்கையில் இருந்தே இந்த படகின் மூலம் தமிழகத்தினுள் ஊடுருவி இருக்கலாம் என தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் கொண்டு, கடலோர பாதுகாப்பு பிரிவினர் , க்யூ பிரிவினர் என பல்வேறு பட்ட தரப்பினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது , வேதாரண்யம் பகுதிக்கு அருகில் உள்ள ஆறுகாட்டு பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அப்பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவி, ட்ரோன் கமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் போலந்து நாட்டை சேந்தவர் என தெரியவந்ததை அடுத்து அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து , தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து கடவுசீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்தினுள் ஊடுருவினார் என குற்றம் சுமத்தி மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025