நாடளாவிய ரீதியில் பயணத்தடை நீக்கம்- யாழ் நகருக்கு படையெடுத்த பெரும் திரள் மக்கள்!
jaffna
lock down
sri Lanka
By Kalaimathy
நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.
நாடு பூராகவும் அமுல்ப்படுத்தப்பட்ட பயணத்தடை சுமார் ஒரு மாதத்தின் பின்னர் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் யாழ் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் வேகாமாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக மதுபான விற்பனை நிலையங்களில் அதிகமானவர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை கொள்வனவு செய்வதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
அத்தோடு மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரனமாக சுகாதார நடைமுறைகளை கண்கானிப்பதற்காக அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










1ம் ஆண்டு நினைவஞ்சலி