பொதுஜன பெரமுனவின் ஆதரவை நாடும் ரணில்! 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு
அடுத்த அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் 30 இராஜாங்க அமைச்சர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நியமனங்கள் அதிபரால் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசில் இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகித்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசின் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
அடுத்த வாரம் நியமனம்
இதற்கமைய அவர்களில் 40 பேரை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பரிந்துரை செய்தது. எனினும், 30 பேரையே ரணில் நியமிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் அடுத்த வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.