அடித்துக்கொலை செய்யப்பட்ட பெண்- வெளியான பின்னணி!
வெலிமடை பகுதியில் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிமடை, மெதஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே கட்டை ஒன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கந்தேஹெல கொடகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெலிமடை மெதஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் 33 வயதான நபர் ஒருவருடன் தவறான உறவை பேணி வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விநாரணைகளின் போது தெரிவியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதில்சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பகஸ்தோவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.