இலங்கையில் ஒமிக்ரோன் பரவ வாய்ப்பு உள்ளதா?? வைத்தியர் வெளியிட்ட தகவல்
கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் (Omicton) இலங்கையில் வியாபிக்க வாய்ப்பில்லை என சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவேந்திர (Chandima Jivendra) தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபு ஐரோப்பா மற்றும் இலங்கையில் வேகமாக பரவும் சாத்தியங்கள் குறைவு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தனது பதிவில்,
தென் ஆபிரிக்க மருத்துவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் திரிபு கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாவிட்டாலும், பூஸ்டர் தடுப்பூசிகளின் மூலம் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளலாம் முடியும்.
இந்த திரிபு தொடர்பில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டும் என்றும் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
There was ?hope that Omicron might not spread as fast in Sri Lanka/Europe. We wouldn’t necessarily see the same rate of spread as in South Africa because high rates of Delta and vaccination would be in Omicron’s way.
— Chandima Jeewandara (@chandi2012) December 8, 2021