விடுமுறையில் சென்ற சிறிலங்கா இராணுவ வீரர்கள் இருவர் செய்த கொலை - உடன் கைது செய்த காவல்துறை
arrest
police
army
By Sumithiran
இரண்டு மாட்டுக் கன்றுகளை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் சிப்பாய் ஒருவரும் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக கபுகொல்லேவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 41 வயதான லான்ஸ் கோப்ரல் மற்றும் 30 வயதுடைய இராணுவ வீரர், மஹா நபடவெவ, திட்டகோனேவ பிரதேசத்தில் வசிக்கின்றனர்.
லான்ஸ் கோப்ரல், எதவெதுனவெவ, கெபிதிகொல்லாவ பகுதியில் உள்ள இராணுவ முகாமிலும், சிப்பாய் நொச்சியாகம, ஹெலம்பவெவ பகுதியில் உள்ள இராணுவ முகாமிலும் கடமையாற்றுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரண்டு சந்தேக நபர்களும் விடுமுறையில் சென்றிருந்த வேளையில் கால்நடைகளை கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாமரவெவ, கபுகொல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய விவசாயி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
