போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை இழப்பீடு வழங்க வேண்டும் ! மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan political crisis
By pavan
காவல்துறை இழப்பீடு வழங்க வேண்டும்
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்ட களங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்கு பின்னர், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்த வந்திருந்தவர்களை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ தவறிய சிரேஷ்ட காவல் அதிகாரிகளில் இருந்து கடமையில் ஈடுபட்டிருந்த அனைத்து அதிகாரிகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மே 9 ஆம் திகதி தாக்குதலின் போது காவல்துறை மா அதிபர் அமைதியான போராட்டகார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தவறியுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
