தமிழ் பொது வேட்பாளர்: சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

Anura Dissanayake M A Sumanthiran Ranil Wickremesinghe Election ITAK
By Shadhu Shanker Mar 30, 2024 12:59 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.”என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, "மக்கள் ஆணையற்ற அதிபரே தற்போது நாட்டில் இருக்கின்றார். எனவே, சட்டத்தின் பிரகாரம் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

அதிபர் தேர்தல்

அத்தோடு தற்போது உள்ள மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றம் வெகுவிரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் ரணில் விக்ரமசிங்க சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்றாக இருக்கின்றது.

precident election 2024

எனவே, நடத்த வேண்டிய தேர்தல்களைக் கூட நடத்தாமல் இருக்கின்ற இந்த அதிபர் இனியும் தாமதிக்காது அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்." - என்றார்.

அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்குப் பேசப்பட்டு வருவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சுமந்திரன் பதிலளிக்கும்போது, "இலங்கைத் தமிழரசுக் கட்சி இதைப் பற்றி இன்னமும் கலந்துரையாடவில்லை. தேர்தல் அறிவிக்கப்படுகின்ற போது இது சம்பந்தமாகக் கலந்துரையாடி முடிவெடுப்போம்.

தமிழரசுக் கட்சி

மேலும், பொது வேட்பாளரோ அல்லது தனி வேட்பாளரோ அது எவருக்கும் இருக்கின்ற உரிமை. யாரும் தேர்தலில் போட்டியிடலாம். எவரையும் போட்டியிடக் கூடாது என்று சொல்லுகின்ற உரிமை எவருக்கும் கிடையாது. இந்தத் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

தமிழ் பொது வேட்பாளர்: சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு | Srilanka President Election 2024 About Sumanthiran

முதலில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்." - என்றார்.

அதிபர் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்குவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை தொடர்பில் சுமந்திரனிடம் கேட்டபோது, "அவர் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியினரும் எல்லா மக்களின் வாக்கும் தங்களுக்குத்தான் என்று சொல்லுவார்கள்.

தமிழ்க் கட்சிகளின் ஆதரவு

ஆகையினால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. எனவே, யாருக்கு வாக்களிப்பது என மக்கள் தீர்மானிப்பார்கள்." என்று பதிலளித்தார்.

தமிழ் பொது வேட்பாளர்: சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு | Srilanka President Election 2024 About Sumanthiran

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்து ஆதரவைக் கோரவுள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் சுமந்திரனிடம் கேட்டபோது, "அடுத்த வாரம் அவர்கள் எம்மைச் சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.

அவர்களோடு மட்டுமல்ல ஏனைய பல கட்சிகளுடனும் நிறைய சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அதிபர் தேர்தல் என்று வருகின்றபோது அதில் யார், யார் வேட்பாளர்கள் என அறிவிக்கப்படுகின்றபோது நாங்கள் உரிய சந்திப்புக்களை மேற்கொண்டு முடிவைத் தீர்மானிப்போம்.

இவ்வாறான நிலைமையில்தான் தேசிய மக்கள் சக்தியினர் எம்மைச் சந்திக்கப் போவதாகச் சொல்லியுள்ளனர். எனவே, எம்மைச் சந்திக்க வருகின்ற எல்லோரையும் நாங்கள் சந்திப்போம்." என்று பதிலளித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, India, பிரான்ஸ், France, Toronto, Canada

01 Jul, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada, Markham, Canada

24 Jun, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

30 Jun, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

20 Jun, 2024
37ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், சங்குவேலி வடக்கு, யாழ்ப்பாணம்

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

கரம்பொன், நீராவியடி, Mississauga, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, கரம்பன், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

முள்ளியவளை, ஒட்டுசுட்டான், Croydon, United Kingdom, Birmingham, United Kingdom

09 Jun, 2024
45ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Mississauga, Canada

11 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா, Scarborough, Canada

27 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

30 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, கிளிநொச்சி, வவுனியா, நொச்சிமோட்டை

01 Jun, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, அரியாலை, கொட்டாஞ்சேனை, கொழும்பு சொய்சாபுரம், Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, யாழ்ப்பாணம்

29 Jun, 2014
மரண அறிவித்தல்

புலோலி, ஜேர்மனி, Germany, அமெரிக்கா, United States, Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022