எனது வாக்குகளை முறையே சஜித், பொதுவேட்பாளர் மற்றும் ரணிலுக்கு அளித்துள்ளேன் - மாவை சேனாதிராஜா
தனது முதலாவது வாக்கினை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைவாகவும் இரண்டாவது வாக்கை பொது வேட்பாளருக்கு மூன்றாவது வாக்கினை ரணில் விக்ரமசிங்கவிற்கும் அளித்துள்ளதாக தமிழரசுக்கட்சி (ITAK) கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியிலே தமிழர்களுடைய விடுதலையை பெறுவதை இலக்காகக் கொண்டு எங்களுடைய வாக்குகளை அளித்திருக்கின்றோம் என மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று (21) தமது வாக்கினை அளித்துவிட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாக்களித்த எமது மக்கள் தாம் விரும்பியவாறு இனத்தின் விடுதலையை மையமாகக் கொண்டு வாக்களித்துள்ளார்கள். நாங்கள் எல்லோரும் தேர்தல் முடிந்ததற்கு பின்னர் எமது தேசத்தின் இன விடுதலைக்காக அனைவரும் ஒன்றுபடுவோம்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தாமதமின்றி தெரிந்துகொள்ள கீழுள்ள ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் இணைந்துகொள்ளுங்கள்.
IBC Website - https://ibctamil.com/whatsapp |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்