தேர்தல் வரலாற்றில் நடைபெற்ற சிறந்த தேர்தல் - ஆணையாளர் நாயகம் புகழாரம்

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024
By Thulsi Sep 21, 2024 04:00 PM GMT
Report

புதிய இணைப்பு

தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல மாவட்டங்களில் 75%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. 1,713 வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த காலப்பகுதியில் எந்த வன்முறையும் பதிவாகவில்லை எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Ratnayake) தெரிவித்துள்ளார்.

தேர்தல் வரலாற்றில் நடைபெற்ற சிறந்த தேர்தல் - ஆணையாளர் நாயகம் புகழாரம் | Srilankan President Election 2024 Result Release

இன்று (21) விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வாக்குகளை எண்ணும் பணிகள்

நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் வரலாற்றில் நடைபெற்ற சிறந்த தேர்தல் - ஆணையாளர் நாயகம் புகழாரம் | Srilankan President Election 2024 Result Release

அத்துடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு 712,318 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் 6,200 ஐத் தவிர ஏனைய அனைவரும் தமது வாக்குகளை அளித்துள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கை மாலை 4.00 மணிக்குத் தொடங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

முதலாம் இணைப்பு 

நாடளாவிய ரீதியில் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று வாக்களிக்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் - கட்டாயம் செய்ய வேண்டியது

இன்று வாக்களிக்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் - கட்டாயம் செய்ய வேண்டியது

உத்தியோகபூர்வ பெறுபேறுகள் 

உத்தியோகபூர்வ பெறுபேறுகள் அதிகாரிகளால் வழங்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவினால் பெறுபேறுகள் வெளியிடப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வரலாற்றில் நடைபெற்ற சிறந்த தேர்தல் - ஆணையாளர் நாயகம் புகழாரம் | Srilankan President Election 2024 Result Release

38 வேட்பாளர்களின் பெறுபேறுகளும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் அதற்கு முன்னதாக தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் போட்டித்தன்மைக்கு அமைய முன்கூட்டியே பெறுபேறுகளை வெளியிடக் கூடாது. ஆணைக்குழு வழங்கும் உத்தியோகபூர்வ முடிவுகளை மட்டுமே வெளியிடுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்! மாலை 9 மணி முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலை

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்! மாலை 9 மணி முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலை

ஜனாதிபதித் தேர்தல் குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026