அதிர வைக்கும் அநுரவின் வெற்றி - சொந்த தொகுதி மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சக்கள்
புதிய இணைப்பு
நாமல் ராஜபக்சவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பெலியத்தை தேர்தல் தொகுதியில் அவர் படுதோல்வியடைந்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் தேர்தல் தொகுதியும், ராஜபக்ச குடும்பத்தின் பரம்பரை தொகுதியுமான பெலியத்தையில் அனுரகுமார திசாநாயக்க பாரிய வெற்றியீட்டியுள்ளார்.
அவர் 34,320 வாக்குகளைப் பெற்று 53.43 வீத வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேர்தல் தொகுதி
இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள சஜித் பிரேமதாச 16,820 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 5,460 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
வெறுமனே 5385 வாக்குகளுடன் நாமல் தனது சொந்தத் தேர்தல் தொகுதியில் நான்காவது இடத்தைப் பிடித்து படுதோல்வியடைந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 499,048 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாச 210,701 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 180,983 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் பா.அரிய நேத்திரன் 24,758 வாக்குகளுடனும், நாமல் ராஜபக்ஷ 17,963 வாக்குகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
திலித் ஜயவீர 4,067 வாக்குகளுடன் 6 இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்...