இந்தியா - பாகிஸ்தான் குண்டுவெடிப்பால் பலப்படுத்தப்பட்டு இலங்கையின் பாதுகாப்பு
அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்காக இலங்கை பாதுகாப்புப் படையினர் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை குறித்த சம்பவங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்தின் புலனாய்வு சேவைகள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருப்பதாகவும் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்தும் அரசாங்கத்திற்கு சரியான நேரத்தில் அறிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்க தனி புலனாய்வு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள்
குறித்த குண்டுவெடிப்புகள் தொடர்ச்சியான நாட்களில் நிகழ்ந்துள்ள பின்னணியில் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆம் திகதி, டெல்லியில் உள்ள இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை அருகே ஒரு கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மற்றும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்திய புலனாய்வாளர்கள் இந்த தாக்குதலை "வெள்ளை காலர் பயங்கரவாதத்தின்" ஒரு புதிய வடிவம் என்று விவரித்தனர். இது உயர் கல்வி பெற்ற நிபுணர்களால் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்தோடு, அதற்கு அடுத்த நாள், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு நீதிமன்றக் கட்டிடம் அருகே ஒரு குண்டு வெடித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதன் விளைவாக ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 21 பேர் படுகாயமடைந்தனர்
அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள அச்சங்கள் இருந்தபோதிலும், இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் இந்த சம்பவங்கள் இலங்கையில் தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்றும், பிராந்திய பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |