சர்வதேச சட்ட நிபுணர்களின் உதவியை நாடும் இலங்கை!
crisis
srilankan economy
legal experts
loan settelment
By Kanna
கடன் மறுசீரைப்பு தொடர்பான தொழில்நுட்ப உதவிகளுக்கு சர்வதேச சட்ட நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமையாலும் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளமையாலும் அரசாங்கத்தால் அந்நிய நாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களை திரும்ப வழங்க முடியாத நிலைக்குள்ளாகியுள்ளது.
இதனால், கடன் மறுசீரமைப்பு தொடர்பான தொழில்நுட்ப உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு சர்வதேச சட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
சர்வதேச நாணயத்துடனான சந்திப்பிற்கு முன்னரே இந்த தீர்மானத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தகவல் வழங்கியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி