டொலர் நெருக்கடியால் இலங்கைக்கு சீனி வழங்க மறுக்கும் இந்திய விநியோகஸ்தர்கள்?
srilanka
political
sugar
import
dollars
By S P Thas
தற்போது இலங்கையில் காணப்படும் டொலர் நெருக்கடி காரணமாக இந்திய விநியோகஸ்தர்கள், இலங்கை சீனியை வழங்க தயங்குவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனி இறக்குமதிக்கான ஆவணங்களை ஏற்க இலங்கையின் தனியார் வங்கிகள் தயக்கம் காட்டி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சீனியை இறக்குமதி செய்ய அரசாங்கம் மீண்டும் அனுமதியை வழங்கியுள்ள போதிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தியாவில் சீனி விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால், இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் சீனியை விற்பனை செய்ய முடியாது எனவும் இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.