மக்களின் வயிற்றில் விழுந்த அடி - இரத்தக் கண்ணீரில் ஸ்ரீலங்கா! கலக்கத்தில் தேரர்கள் - கொதி நிலையில் தென்னிலங்கை
கொதிநிலையில் தென்னிலங்கை அரசியல் உச்சக்கட்டத்தை தொட்டு நிற்கிறது. தற்போதைய கோட்டாபய அரசின் விம்பம் மெல்லமெல்ல உடைந்து கொண்டிருக்கும் நிலையில், செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் மக்கள்.
நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கையில், எரிபொருள் விலையேற்றம் மக்களை கடுமையாக கொந்தளிக்கச் செய்திருக்கிறது.
எரிபொருள் விலையேற்றத்துடன், நின்றுவிடாது, பாண், பால்மா, அரிசி என்று அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாக உருவெடுத்திருக்கிறது.
ஏற்கனவே முழு முடக்கத்தால் அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்க்கை நடுத்தும் குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
மறுபுறமோ மீன் பிடித்து வாழ்க்கை நடத்திய மீனவர்கள் பரிதவிக்கிறார்கள். இன்னொரு புறம் ஏழைக் குடும்பங்கள் செய்வதறியாது திகைத்து கிடக்கிறார்கள்.
இது தொடர்பான விரிவான காணொளி இதோ...