எச்சரிக்கையுடன் செயற்படவும்! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள தகவல்
Weather
People
Rain
Department of Meteorology
SriLanka
By Chanakyan
மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்