மைத்திரியுடன் பேசுவோம் வாருங்கள் - சந்திரிகாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் தங்கள் கட்சியில் இணைந்தால் அதை ஒரு கௌரவமாக கருதுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன்பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்று ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் அனைத்து இலங்கைக் குழு கூட்டத்தையும் இரத்து செய்யுமாறு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தயாசிறிக்கு அனுப்பிவைத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சி முடிவுக்கு எதிராக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்ததால் திருமதி குமாரதுங்க கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.