சிறிலங்கன் ஏர்லைன்ஸின் புதிய தலைவர் தெரிவு! இறுதிப்பட்டியலில் நால்வர்
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி (CEO) தேர்வு செயல்முறை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி, இறுதி நேர்முகத் தேர்விற்காக நான்கு பேர் குறுகியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பட்டியலில் ஒரு இலங்கை வேட்பாளருடன், மூன்று வெளிநாட்டு வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
நியமனத்தில் உள்ள சிக்கல்
குறிப்பாக தேசிய மக்கள் சக்தி நிர்வாகத்தின் கீழ், முக்கிய அரச நிறுவனங்களில் உள்ளூர் பிரதிநிதித்துவம் முக்கியம் என்ற விவாதங்கள் இருந்தபோதிலும், இறுதி பட்டியலில் வெளிநாட்டு நிபுணர்களும் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

Image Credit: Advocata Institute
இறுதி தேர்வில் வெளிநாட்டு நபர் தேர்வு செய்யப்பட்டால், அது மேலதிக கவனத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக தொழில்துறை பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இறுதி நேர்முகத் தேர்வு
இந்த நிலையில், இறுதி நேர்முகத் தேர்வு அடுத்த சில நாட்களில் கொழும்பில் இடம்பெறவுள்ளதுடன், இறுதிப்பட்டியலில் உள்ள நான்கு வேட்பாளர்களுக்கும் பயணச் செலவுகள் மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: The Portuguese Traveler
இதற்கு முன்னர், 2025 மே மாதத்தில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டல் பதவியில் இருந்து விலகியிருந்ததுடன், அந்த முடிவிற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்