ரியாத் - துபாயிற்கான சேவையை ஆரம்பித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரியாத் (Riyadh) மற்றும் துபாய் (Dubai) நகரங்களுக்கான நாளாந்த விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், ரியாத் நோக்கிய நாளாந்த விமானங்கள் இன்றிரவு (09-03-2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்தோடு, துபாய் நோக்கிய விமானங்கள் நாளை (10-03-2026) முதலும் வழமை போல் இயங்கும்.
ஊழியர்களின் பாதுகாப்பு
மத்திய கிழக்கின் நிலைமைகளை அதிகாரிகள் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

🛑 இயக்கப்படவுள்ள விமானங்களின் விபரங்கள் :
| விமானம் UL265 | கொழும்பு - ரியாத் (புறப்படும் நேரம்: 18:15 மணி) |
| விமானம் UL266 | ரியாத் - கொழும்பு (புறப்படும் நேரம்: 22:35 மணி) |
| விமானம் UL231 | கொழும்பு - துபாய் (புறப்படும் நேரம்: 12:40 மணி) |
| விமானம் UL232 | துபாய் - கொழும்பு (புறப்படும் நேரம்: 17:00 மணி) |
கடந்த சில நாட்களாக வான்பரப்பு மூடப்பட்டதால் ரத்து செய்யப்பட்டிருந்த ஏனைய இடங்களுக்கான விமானச் சேவைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |